இது புஷ்ஷின் தோல்வி: அல்-கொய்தா
துபாய்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இராக்கில் தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என பின் லேடனின்வலதுகரமான, அல்-கொய்தாவின் நம்பர் டூ அய்மான்-அல்-ஜவாகிரி கூறியுள்ளார்.
இராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் இராக்கில்அமெரிக்காவுக்கு படுதோல்வி கிடைத்தது உறுதியாகிவிட்டது. புஷ், நீ உனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவேண்டும்.
நான் ஒரு வருடத்துக்கு முன்பே சொன்னேன். இராக்கில் அமெரிக்காவுக்கு பெரும் தோல்வி காத்திருக்கிறது என்று. அது இப்போதுநடந்துவிட்டது. தனது படைகளை வாபஸ் வாங்குவதாக புஷ் அறிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு ஒரு பொய்க் காரணத்தைக் கூறுகிறார். தனது தோல்வியை மறைத்துவிட்டு இராக்கியப் படைகள்தயாராகிவிட்டதாகவும் அதனால் அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறப் போவதாகவும் பொய் பேசுகிறார்.
இராக்கில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆப்கானில்தானிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. அடுத்து கடவுளின்துணையோடு பாலஸ்தீனத்திலும் அமெரிக்காவை வெல்வோம். அமெரிக்காவின் இந்தத் தோல்விகள் இஸ்லாமுக்குக் கிடைத்தவெற்றி என்றார்.
தனது இடப்பக்கம் ஏகே-47 ரக துப்பாக்கியை சாய்த்து வைத்தபடி, விரல்களைக் காட்டி மிகத் தெளிவாக பேசியிருக்கிறார்ஜவாகிரி.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |