பேரரசு வீட்டில் வருமான வரி ரெய்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பேரரசுவிடம் திருப்பதி பட ஷூட்டிங் தளத்தில் வைத்துவருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் விசாரணை மேற்கொண்டதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலரின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறைஅதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான நகைகள், சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்யின் கல்யாண மண்டபத்தில் சில நாட்களுக்கு முன் விடிய விடிய சோதனை நடந்தது. இந்தசோதனையின்போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந் நிலையில், விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசுவிடம்வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது அஜீத் நடிக்கும் திருப்பதி படத்தை பேரரசு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்துவருகிறது. இந் நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்தனர்.

அப்போது அஜீத், சதா, ராஜலட்சுமி ஆகியோர் நடித்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் பேரரசு.

விஜய்யிடம் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும், சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்துமாறுவருமான வரி அதிகாரிகள் கூறினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரரசுவிடம் சுமார் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நிடத்தினர்.விசாரணை நீடித்து வந்ததால் அஜீத் உள்ளிட்ட நடிக, நடிகையர் படப்பிடிப்பு தளத்திலேயே காத்திருந்தனர்.

இதைப் பார்த்த பேரரசு, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நான் இல்லை. வேறு ஒருவர், அவருக்கு இந்தத் தடையால் பெரும்பாதிப்பு ஏற்படும், பண நஷ்டம் ஏற்படும். எனவே படப்பிடிப்பு முடிந்த எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் என்னிடம்விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கோரினார்.

இதை வருமான வரித்துறையினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இங்கு வருவதற்குமுன்பு பேரரசுவின் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.

பேரரசு இயக்கிய விஜய்யின் படங்களுக்கு சரியாக எவ்வளவு சம்பளம் தரப்பட்டது என்பது குறித்தும், விஜய்யின் படங்களைஇயக்கியபோது பேரரசுவுக்கு எவ்வளவு ஊதியம் தரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+