ஏட்டையாவை அறைந்த பெண் எஸ்ஐ!
கடலூர்:
21 வருட பணி அனுபவம் வாய்ந்த தலைமைக் காவலர் ஒருவரை, பயிற்சியில் இருக்கும் ஒரு பெண் சப்- இன்ஸ்பெக்டர்கன்னத்தில் அறைந்தார். இதனால் கடலூர் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடி வாங்கிய தலைமைக் காவலரும், அடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காலவராக இருந்தவர் அன்பழகன். 21 வருடங்களாக காவல்துறையில்பணியாற்றி வருகிறார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் மூத்த காவலர் அன்பழகன் தான். இக்காவல் நிலையத்தில்சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் செந்தில் விநாயகம்.
சில நாட்களுக்கு முன்பு, ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரை ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டியிருந்தது. இந்தப் பணியை அன்பழகனிடம் ஒப்படைத்தார் செந்தில் விநாயகம். கூடவே, வேறு இரு கைதிகளையும்அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
ராஜகோபால் மிகவும் மோசமான ஆள் என்பதால் கூடுதலாக சில காவலர்களை அனுப்புமாறு செந்தில் விநாயகத்திடம்அன்பழகன் கோரியுள்ளார். ஆனால் அதை கேட்க மறுத்த செந்தில் விநாயகம், நான் சொல்வதைக் கேளுடா என்று கூறியுள்ளார்.(காவல்துறையில் கீழே பணி புரிபவர்களை வாய்யா, போய்யா, இவனே, அவனே என்று அழைப்பதெல்லாம் சகஜமாகவேஇருந்து வருகிறது)
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன் சார், நான் 21 வருடங்களாக போலீஸ்காரனாக உள்ளேன். இப்படி மரியாதைக்குறைவாக பேசாதீர்கள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த சப்- இன்ஸ்பெக்டர், அன்பழகனை தாறுமாறாகத்திட்டியுள்ளார். பதிலுக்கு அன்பழகனும் சப்தம் போட்டுள்ளார்.
அப்போது செந்தில் விநாயகத்தின் அருகில் நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி கோபத்துடன் பாய்ந்து வந்து, அன்பழகனின்கண்ணத்தில் பளார் என அறைந்துள்ளார். இத்தனைக்கும் இந்த எழிலரசி பயிற்சியில் தான் இருக்கிறார்.
தனக்கு வேண்டியவரான செந்தில் விநாயகத்துக்கு ஆதரவாகப் பாய்ந்து வந்திருக்கிறார் எழில்.
பெண் எஸ்.ஐ, அதுவும் ஒரு பயிற்சி எஸ்.ஐ. தன்னை அறைந்ததால் நிலைகுலைந்த அன்பழகன் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அவரது கண்கள் கலங்கிவிடஸ காவல் நிலையமே ஸ்தம்பித்திருக்கிறது.
இந்தத் தகவல் டி.எஸ்.பி. பெரோஸ் கானுக்குப் பறந்தது. அவர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். நடந்த சம்பவம்குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பன்னீர் செல்வத்திற்குத் தெரிவித்தார்.
நடந்ததை விசாரித்த எஸ்.பி, தலைமைக் காவலரை கை நீட்டி அறைந்த எழிலரசியை ஆயுதப் படைக்கும், மேலதிகாரியைஎதிர்த்துப் பேசினார் என்று சொல்லி ஏட்டையா அன்பழகனை கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றுமாறு உத்தரவிட்டார். அதன்படிஇருவரும் மாற்றப்பட்டனர்.
அனுபவம் வாய்ந்த தலைமைக் காவலரை கை நீட்டி அறைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடலூர் காவல்துறைகொந்தளிப்புடன் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications