மதுரையில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டம்?
மும்பை:
மதுரையை தாக்கத் திட்டமிட்ட 3 தீவிரவாதிகள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் ஐஐஎஸ்சி தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூர், ஹைதராபாத், சென்னை, டெல்லி, கோலார் ஆகிய இடங்களில் சிலமுக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்தது வருகிறது.இந் நிலையில் மும்பையில் 3 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள்காஷ்மீரில் உள்ள சோப்பூர், பாரமுல்லா மாவட்டங்களை சேர்ந்த குர்ஷித்கானி லோன் (வயது 29), அர்ஷத்குலாம் பத்ரு உசேன்(வயது 27), ரம்சான் வகாப் காஜி (வயது 50) என்று தெரிய வந்துள்ளது.
இவர்களிடம் இருந்து 6 எலக்ட்ரானிக் சர்க்யூட்கள், 20 டெட்டனேட்டர்கள், 5 டைம் பாம் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீன கைத்துப்பாக்கி ஒன்றும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இவை தவிரவெடி பொருட்களும் பிடிபட்டன.
3 தீவிரவாதிகளிடமும் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் நாடெங்கும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி டெல்லி, சண்டிகார், புனே, நொய்டா, குர்காவ்ன், இந்தூர்,விசாகப்பட்டினம், மைசூர், மதுரை ஆகிய நகரங்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக தீவிரவாதிகள் உறுதிப்படுத்தினர்.
மதுரையை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறிவைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். எனவே மதுரை போலீார்அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications