பொங்கல்: தமிழகத்தில் சிறப்பு ரயில்கள்
மதுரை:
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய நகர்களுக்கு சிறப்புரயில்களை இயக்க ரயில்வே இணை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும்செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, வரும் 10ம்தேதி சிறப்பு ரயில் விடப்படுகிறது.இந்த சிறப்பு ரயில் கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம்,மாம்பலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, வரும் 16ம் தேதி சிறப்பு ரயில் இரவு 11 மணிக்கு புறப்படுகிறது. இந்தரயில் மறு நாள் காலை மதுரையை சென்றடைகிறது.
மேலும் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, 15ம் தேதியும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 15ம் தேதிமாலை 6 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
இதே போல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 16ம் தேதி இரவும், நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 17ம் தேதிஇரவும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சிக்கு சென்னையில் இருந்து 18ம் தேதி இரவு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது.
இதையடுத்து சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் 11ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.திருவனந்தபுரத்தில் இருந்து மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரலுக்கு 15ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்னகரயில்வே செய்தி குறிப்பு கூறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications