மேத்தாவுக்கு கலைஞர் விருது
சென்னை:
கவிஞர் மு. மேத்தா, முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் கலைஞர் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் 3 பேருக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகுறித்து முரசொலி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,11.10.1996ம் ஆண்டு அன்று முரசொலி அறக்கட்டளை சார்பில் தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்துவிளங்குவோரை தேர்வு செய்து, முரசொலி நிறுவனர் மற்றும் முரசொலி அறக்கட்டளை தலைவர் கலைஞர் விருதும், தலா ரூ. 1லட்சம் பொற்கிழியும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இந்த விருதும், பொற்கிழியும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2005ம் ஆண்டுக்கான விருது பெற எழுத்தாளர்சின்னக்குத்தூசி, கவிஞர் மு.மேத்தா, ஓவியர் ஜெயராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 30ம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில், திமுக தலைவர் கருணாநிதி விருதுகளை வழங்குவார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications