கம்ப்யூட்டர் நிறுவனங்களுடன் சென்னை கமிஷனர் ஆலோசனை
சென்னை:
சென்னையில் உள்ள கம்ப்யூட்டர், கால் சென்டர் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு நிலைமை குறித்துசம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் பெங்களூர் கால் சென்டரில் பணியாற்றி வந்த பிரதீபா என்ற பெண், அந்த நிறுவனத்தின் கார் டிரைவரால் கடத்தப்பட்டு,கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்குப் பின்னர் பெங்களூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தஅம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையிலும் ஏராளமான கம்ப்யூட்டர் மற்றும் கால் சென்டர்நிறுவனங்கள் உள்ளதால், இதில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள கம்ப்யூட்டர், கால் சென்டர் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மாநகர காவல்துறைஆணையர் நடராஜ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள்கலந்து கொண்டனர்.
காவல்துறை தரப்பில் ஆணையர் நடராஜ், கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், இணை ஆணையர் சைலேந்திரபாபு, சுந்தரமூர்த்திஉள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பெண் ஊழியர்கள் அதிக அளவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும், கார்டிரைவர்கள் குறித்த முழு விவரத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்,
அவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்க வேண்டும், அவர்கள் குறித்த முழு விவரங்களும் தெரிந்த பின்னரேவேலையில் சேர்க்க வேண்டும், அவர்களது பணி விவரம் குறித்த முழு விவரம் அலுவலக பாதுகாவலர்களிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நடராஜ் வழங்கினார்.
இதே போல தீவிரவாதத் தாக்குதல் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு முறைகள், வாகன நிறுத்துமிடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும்ஆலோசிக்கப்பட்டது












Click it and Unblock the Notifications