கொழும்பில் கொல்லப்பட்ட பொறியாளர் உடல் சென்னை வந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர மாநில பொறியாளரின்உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆத்மகுரு பிரசாத். இவர் கொழும்புவில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றில்பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 4ம்தேதி இரவு இவர் பணி முடிந்து இரவு சாப்பாட்டுக்காக திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர்பிரசாத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவரை சுட்டது யார் என்று தெரியவில்லை.

பிரசாத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவர் வேலை பார்த்த நிறுவன அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.இதையடுத்து விமானம் மூலம் பிரசாத்தின் உடல் இன்று சென்னைக்கு எடுத்து வரப்பட்டது.

உடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் பிரசாத் உடலை, கார் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர். இன்றுஅவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+