கர்நாடக அத்துமீறல்: ஓக்கேனக்கலில் வேலை நிறுத்தம், கடையடைப்பு
ஓக்கேனக்கல்:
ஓக்கேனக்கலில் கர்நாடக அதிகாரிகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்தும், தமிழக அரசு அதிகாரிகள்மெத்தனமாக செயல்படுவதைக் கண்டித்தும், பரிசல் ஓட்டிகள், மசாஜ் செய்பவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையடைப்பும் நடக்கிறது.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான ஓக்கேனக்கல் தான், காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும்இடமாகும். எழில் கொஞ்சும் அருவிகள் நிறைந்த ஓக்கேனக்கலை, தனக்குத் தான் சொந்தம் என்று கர்நாடகம் சமீப காலமாக கூறிவருகிறது.வீரப்பன் உயிருடன் இருக்கும் வரை ஓக்கேனக்கலை கண்டு கொள்ளாத கர்நாடக அரசு இப்போது ஓக்கேனக்களை ஆக்கிரமிக்கமுயற்சி எடுத்து வருகிறது. கர்நாடக வனத்துறையினர் அடிக்கடி அத்துமீறி ஓக்கேனக்கலுக்குள் நுழைந்து பரிசல் ஓட்டிகளைமிரட்டுவதும், கைது செய்வதுமாக மிரட்டி வருகிறார்கள்.
சர்ச்சைக்குரிய பகுதிகள் தமிழகத்திற்குத் தான் சொந்தம் என்று முடிவாகி விட்ட போதிலும் அதை கண்டு கொள்ளாத கர்நாடகஅரசு அதிகாரிகள் தொடர்ந்த அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், ஓக்கேனக்கலை பாதுகாக்கும் அமைப்பு என்ற புதிய அமைப்புநிறுவப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் இன்று ஓக்கேனக்கலில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் பரிசல் ஓட்டிகள், மசாஜ்செய்பவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கடையடைப்பும் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டம் காரணமாக ஓக்கேனக்கல் முழுவதும் வெறிச் சோடிக் கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் யாரும் இன்றுஓக்கேனக்கலுக்கு வர வேண்டாம் என்று ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டதால் சுற்றுலா பயணிகள் யாரும் இன்றுஓக்கேனேக்கலுக்கு வரவில்லை. போராட்டம் குறித்து தெரியாமல் வந்த ஒரு சில சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.












Click it and Unblock the Notifications