ஒட்டுகேட்பு: உச்ச நீதிமன்றத்தில் அமர்சிங் வழக்கு
டெல்லி:
தனது தொலைபேசியும் உபி முதல்வர் முலாயம் சிங் யாதவின் தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின்பேரில் தங்களது ரிலையன்ஸ் இன்போகாம் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டதாக அமர்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.இத்தனைக்கும் ரிலையன் இன்போகாம் அதிபர் அனில் அம்பானியும் அமர்சிங்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதுவரை அனில் அம்பானி மீது குற்றம் சுமத்தாமல் இருந்து வந்தார் அமர்சிங். இது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் ரிலையன்ஸ் இன்போகாமையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்துள்ளார்அமர்சிங்.
அனிலுக்குத் தெரியாமல், இன்போகாம் அதிகாரிகள் சிலரை வளைத்துப் போட்டு, டெல்லி போலீஸ் உதவியுடன் தனதுதொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக அமர்சிங் கூறி வருகிறார்.
அமர்சிங்கை சந்தித்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கூட தங்களதுதொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய அமர்சிங், நான் பிரதமரிடம் எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டது குறித்துதொலைபேசி மூலம் புகார் சொன்னேன். அதையும் கூட ஒட்டு கேட்டுள்ளார்கள். அதாவது பிரதமரின் தொலைபேசி கூட ஒட்டுகேட்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications