தேர்தல்: கலெக்டர்களுடன் டாண்டன் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கோவையில் எட்டு மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபையின் ஆயுட் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.

இந் நிலையில், இன்று காலை சென்னை வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன் அங்கிருந்து கோவை சென்றார்.

அங்கு கோவை, திருச்சி, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்கள், எஸ்பிக்களுடன் டாண்டன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் துணைத் தேர்தல் ஆணையர் அனந்த்குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்டோர்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, புகைப்பட அடையாளஅட்டை வழங்கும் பணி உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் டாண்டன் பேசினார். அப்போது தமிழகத்தில் எப்போது தேர்தல் நிடத்தப்படும் என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது, சட்டசபையின் ஆயுட்காலம் மே 21ம் தேதி முடிகிறது. எனவே எப்படியும் அதற்குள் தேர்தல்நடத்தப்பட்டு விடும் என்று சிரித்துக் கொண்டே கூறினார் டாண்டன்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 45,745 வாக்குச் சாவடிகள் உள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்கும் திட்டம் குறித்து அடுத்த மாதம் 15ம் தேதிடெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் டாண்டன்.

இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு மதுரை செல்லும் டாண்டன், அங்கு தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மண்டலமாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித் தலைவர்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து சென்னை வரும் டாண்டன், அங்கு வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைநடத்துகிறார்.

டாண்டனின் பயணத்திற்குப் பின்னர் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகளுடன் ஒரு நாள் ஆலோசனைக்கூட்டம் நடைபெறக் கூடும் என்றும் தெரிகிறது. இதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+