சிறுமியை கற்பழித்த பாதிரியார் !

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்:

கோவை அருகே அனாதை இல்லத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமியை அந்த இல்லத்தின் நிர்வாகியான பாதிரியாரால்மானபங்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சென்னாமலை கரட்டு மேடு பகுதியை சேர்ந்தவர் மாராத்தாள் (வயது 35).இவரது கணவர் மாரியப்பன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மாராத்தாள் தனது மகள்கள் லட்சுமி (வயது 13), சித்ரா (வயது 10), மகன் ஆறுச்சாமி (வயது 5) ஆகியோருடன் தனியாகவசித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இந் நிலைஸயில் அந்த கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கப்பட்டது. இதையடுத்து மாராத்தாள் தனதுகுழந்தைகளையும் அங்கு சேர்த்தார். இதற்கிடையே சென்னாமலை கரட்டில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் விடுதிமொங்கம்பாளையம் கிராமத்துக்கு இடம் பெயர்ந்தது. அங்கு மாதம் ஒருமுறை சென்று தனது குழந்தைகளை பார்த்து வந்தார்மாராத்தாள்.

கடந்த நவம்பர் மாதம் தனது குழந்தைகளை பார்க்க சென்ற மாராத்தாளிடம் உனது மகள் லட்சுமி பெரியவளாகி விட்டாள்.அவளை வீட்டுக்கு அழைத்து செல் என்று விடுதியில் கூறிவிட்டனர்.

இதையடுத்து லட்சுமியை வீட்டுக்கு அழைத்து வந்தார் மாராத்தாள். ஆனால் வீட்டுக்கு வந்தது முதல் லட்சுமிக்கு உடல் நிலைபாதிக்கப்பட்டது. அடிவயிறு வலிப்பதாகவும், சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் லட்சுமி கூறவே மேட்டுப்பாளையம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பாலியல்ரீதியாக சித்ரவதை செய்ப்பட்டிருக்கலாம் என்றும் கருக்கலைப்புமாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்றும் கருதினர்.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட லட்சுமிக்கு இடுப்புக்கு கீழே செயல்படாமல் போனது. மேலும்புண் ஏற்பட்டு சீழ் வடியத் தொடங்கியது. அப்போது தான் லட்சுமி தனது தாயாரிடம், அனாதை விடுதியில் தங்கியிருந்த போதுதனக்கு மயக்க மாத்திரை கொடுத்து நிர்வாகி சார்லஸ் தன்னை கற்பழித்தைக் கூறினார்.

இந்த விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவியது. உடனே சேவா பாரதி மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம், வழக்கறிஞர்கணேச பாண்டியன், ஆண்கள் சுய உதவிக் குழுவினர் ஆகியோர் மாராத்தாள் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்துவிசாரித்தனர்.

பிறகு லட்சுமியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தமருத்துவர்கள் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து அறிந்த கோவை குற்றப்பிரிவு டிஎஸ்பி தண்டாயுதபாணி தலைமையிலான போலீசார் அரசுமருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது லட்சுமி கொடுத்த வாக்குமூலத்தில், பாதிரியார் சார்லஸ் தனக்கு மாத்திரைகள் கொடுத்ததாகவும் அதனை சாப்பிட்டபின் தன்னை கற்பழித்ததாகவும் அதன் பிறகே தான் பெரிய மனுஷி ஆனதாகவும் தொடர்ந்து பலமுறை மாத்திரைகள்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து காரமடை போலீசார் பாதிரியார் சார்லஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+