வந்தார் ஜெயேந்திரர்; வரவில்லை விஜயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

சங்கரராமன் கொலை வழக்கில், பாண்டிச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் உள்ளிட்டோர் இன்று நேரில்ஆஜரானார்கள். ஆனால், விஜயேந்திரர் உள்ளிட்ட 2 பேர் மட்டும் வரவில்லை.

புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த 3 முறைவிசாரணைக்கு வந்தபோது ஜெயேந்திரர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர். மேலும், நீதிபதியும் இதுகுறித்து அதிருப்தி வெளியிட்டார்.

இதையடுத்து இன்று நடைபெறும் விசாரணையின்போது சங்கராச்சாரியார்கள் நேரில் ஆஜராவார்கள் என்று அவர்களது தரப்புவழக்கறிஞர் உறுதியளித்திருந்தார்.அதன்படி இன்று விசாரணைக்கு வழக்கு வந்தபோது ஜெயேந்திரர் உள்ளிட்டோர் நேரில்ஆஜராகினர்.

விஜயேந்திரர் உள்ளிட்ட 2 பேர் மட்டும் வரவில்லை. இதையடுத்து வழக்கை நீதிபதி சின்னப்பாண்டி பிப்ரவரி 9ம் தேதிக்குஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+