கருணாநிதி, ராமதாசுடன் இலங்கை தமிழ் எம்பி சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்திற்குப் பிறகு, இலங்கைத் தமிழர்கள் குறித்து இந்திய அரசோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்தஅரசியல் தலைவர்களோ பரிவு காட்டுவதை நிறுத்தி விட்டனர் என்று இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்சந்திரமோகன் வருத்தம் தெரிவித்தார்.

சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நார்வே நாட்டுக்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம்? மொழிரீதியிலும், கலாச்சார அடிப்படையிலும் சற்றும் சம்பந்தம் இல்லாத நார்வே, தானாக முன் வந்து இனப் பிரச்சினைக்கு தீர்வு காணமுயன்று வருகிறது.

அப்படி இருக்கையில், இன, மொழி, கலாச்சார அடிப்படையில் மிகவும் நெருங்கிய நாடான இந்தியா மட்டும் அமைதிமுயற்சிகளில் தலையிடாமல் மெளனம் சாதிப்பது ஏன்? இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை இந்தியாவின் தலையீடுகண்டிப்பாக தேவை. இந்தியாவின் முயற்சி இல்லாமல் அமைதித் தீர்வு காண்பது கடினம்.

இந்தியா தனது கடமையிலிருந்து விலகி விடக் கூடாது. இலங்கை இனப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க உதவவேண்டும்.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் மீது இந்திய அரசு பரிவு காட்டுவதை நிறுத்தி விட்டது. அதேபோல,தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், இலங்கைத் தமிழர்கள்பால் அன்பு காட்டுவதை விட்டு விட்டனர்.

அமைதி முயற்சியில் இந்திய அரசு ஈடுபட முன் வந்தால் அதை விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயம் வரவேற்கும் என்றார்சந்திரமோகன்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரையும் சந்திரமோகன் சந்தித்துப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+