புதிதாக கட்சி தொடங்கும் பாமக எம்.எல்.ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் சாதிகளின் எழுச்சிக்காக புதிய கட்சி தொடங்கப் போவதாக பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.முருகவேல்ராஜன்கூறியுள்ளார்.

மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர் முருகவேல்ராஜன். தலித் சமூகத்தைச் சேர்ந்த ருகவேல்ராஜன், பாமகவின் வந்தவாசி(தனி) தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.

பாமகவில் தலித்துகள் மிகவும் கேவலமாக நடத்தப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவருக்குபாமகவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சட்டசபைக் கூட்டத்திற்குக் கூட வராமல் மதுரையிலேயே தங்கியிருந்தார்.

பாமக தொடர்பான கூட்டங்களில் கூட அவர் பங்கு கொள்வதில்லை. மாறாக, தான் நடத்தி வரும் தலித் அமைப்பின் சார்பில்கூட்டங்கள் நடத்தி வந்தார்.

இந் நிலையில் இப்போது தேர்தல் வரப் போகும் நிலையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போவதாக முருகவேல்ராஜன்அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

தமிழ் சாதிகள் எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளேன். மதுரையில் வரும் 29ம்தேதி இக்கட்சி தொடங்கப்படும்.

தலித்துகளின் எழுச்சியில் டாக்டர் ராமதாஸுக்கு உண்மையான அக்கறை இருப்பதால் இந்தக் கட்சிக்கு அவரது ஆசி கிடைக்கும்என நம்புகிறேன்.

எனது பதவியைப் பறிக்கும் அளவுக்கு அவர் நடந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கிறேன்.

சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு இந்தக் கட்சியை தொடங்கவில்லை. மாறாக, இது எனது மனதில் நீண்ட நாட்களாகசுமந்து வந்த எண்ணம்தான். இதை இப்போது செயல்வடிவில் கொண்டு வரவுள்ளேன்.

இக்கட்சி திமுக கூட்டணியை கடுமையாக எதிர்க்கும். காரணம், திமுக தலித் விரோத கட்சியாகும். தலித் விரோதநடவடிக்கைகளில் கருணாநிதி தீவிரமாக இருக்கிறார்.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கருணாநிதிக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட நெருக்கடியின்போது திருமாவளவனும், டாக்டர்கிருஷ்ணசாமியும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஆனால் அவர்களை கருணாநிதி தூக்கி எறிந்து விட்டார்.

சாதிக் கட்சிகளை சேர்ப்பதில்லை என்று கூறி நாடாளுமன்றத் தேர்தலில் தலித்துக்களை அவர் புறக்கணித்து விட்டார். சம்பந்திசமுதாயம் என்று கூறியே நீண்ட காலமாக தலித்துகளின் ஓட்டு வங்கியை அவர் சுரண்டி வருகிறார்.

ஆனால் திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒரு தலித்தாவது இருக்கிறாரா என்றால் இல்லை. அதிகாரம் நிறைந்த அமைச்சர்பதவியிலும் ஒரு தலித்தை கூட அவர் அமர்த்தியதில்லை. அதனால்தான் கருணாநிதியை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்முருகவேல்ராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+