பிடிபட்டான் லட்சாதிபதி கொள்ளையன்
சென்னை:
15 வயதிலிருந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு லட்சாதிபதியான பிரபல கொள்ளையனை சென்னை போலீஸார் நீண்டபோராட்டத்திற்குப் பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மன்னார்குடியைச் சேர்ந்தவன் பாஸ்கர். பலே திருடன். 15 வயது முதல் திருட்டில் ஈடுபட்டு வந்தான். திருடித் திருடியே லட்சாதிபதிஆகி விட்ட பாஸ்கர், திருவாரூரில் ஒரு ஹோட்டல் கட்டி நடத்தி வந்தான். திண்டுக்கல்லில் ஒரு பெரிய பங்களாவும் உள்ளது.பாஸ்கருக்கு இரண்டு மனைவிகள், 3 குழந்தைகள். பாஸ்கரின் திருட்டுத்தனம் மிகவும் நுணுக்கமானது. தனது 2வதுமனைவியுடன் ஏதாவது ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கு சென்று குடியேறுவான். பகலில் வீடுகளை நோட்டமிடும் பாஸ்கர்,இரவில் பூட்டி வீடுகளுக்குச் சென்று பூட்டை உடைத்து திருடுவான்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இவ்ாறு திருடியுள்ள பாஸ்கர், சென்னையிலும் தனது கடையைப் பரப்பினான். 10க்கும் மேற்பட்டவீடுகளில் பாஸ்கர் கொள்ளையடித்து, 300 பவுனுக்கு மேல் சுருட்டினான்.
பாஸ்கரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் அவனை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந் நிலையில், பெரவள்ளூர் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு வீட்டில் பாஸ்கர் திருட முயன்றுகொண்டிருந்ததைப் பார்த்தனர். இதையடுத்து போலீஸார் அவனைப் பிடிக்க விரைந்தனர்.
போலீஸாரைப் பார்த்து விட்ட பாஸ்கர், மின்னல் வேகத்தில் ஓடி பக்கத்து வீட்டில் புகுந்து விட்டான். அந்த வீட்டில் அப்போதுயாரும் இல்லை. பூட்டிய வீட்டுக்குள் எப்படி பாஸ்கர் புகுந்தான் என்று விழித்த போலீஸார் வீட்டையே சுற்றி வந்துகொண்டிருந்தனர்.
சுமார் 6 மணி நேர இழுபறிக்குப் பின்னர் போலீஸார் குழப்பமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து மெதுவாக வெளியே வந்தான் பாஸ்கர். இதைப் பார்த்த போலீஸார் மறுபடியும்அவனை விரட்டினர். ஒரு வழியாகப் பிடித்தனர். ஆனால் தன்னைப் பிடித்த போலீஸ்காரரின் கையைக் கடித்து விட்டு பாஸ்கர்ஓடத் தொடங்கினான்.
இதைத் தொடர்ந்து என்கெளண்டர் மூலம் சுட்டு வீழ்த்தி விடுவோம் என்று போலீஸார் துப்பாக்கிகளை தூக்கினர். இதைக்கேட்டதும் பயந்து போன பாஸ்கர் அப்படியே நின்று விட்டான்.
ஒரு வழியாக நீண்ட நேர நள்ளிரவுப் போராட்டத்திற்குப் பின்னர் பாஸ்கரைப் பிடித்த போலீஸார் அவனை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாஸ்கரிடமிருந்து 123 பவுன் தங்க நகைகள், பத்து கிலோ வெளிப் பொருட்கள், 25,000 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீஸார்பறிமுதல் செய்தனர். பாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், தமிழகத்தில் நடந்த பல்வேறு திருட்டு, கொள்ளைச்சம்பவங்களுக்கு விடை கிடைக்கும் என போலீஸார் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications