ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூகோல சொர்க்கம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள்ஸ்ரீரங்கத்தில் குவிந்து வருகின்றனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம்ரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 20 நாட்கள் நடைபெறும்.

பகல் பத்து, இராப் பத்து என்று பிரித்து இந்த விழா நடைபெறும். கடந்த 30ம் தேதி ஏகாதசி விழா தொடங்கியது. 31ம் தேதி முதல்பகல் பத்து தொடங்கியது.10ம் நாளான இன்று காலை பெருமாள், கருவறையிலிருந்து நாச்சியார் திருக்கோலத்தில் கிளம்பிஅர்ச்சுனன் மண்டபம் வந்து சேர்ந்தார்.

மாலை 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கருவறை செல்கிறார். நாளை அதிகாலை 3.30 மணிக்கு பரமபத வாசல் அல்லதுசொர்க்க வாசல் வழியாக நம்பெருமாள், ரத்தின அங்கி அலங்காரத்துடன் சென்று ஆயிரங்கால் மண்டப மணல் வெளியில்பக்தர்களுக்கு அருள் தருவார்.

சொர்க்க வாசல் திறக்கப்படுவதையொட்டி இன்று இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து, பெருமாளை வணங்கி சொர்க்க வாசல்வழியாக சென்று முக்தி பெறுவர். இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பகல் பத்தின் முடிவு தினமான இன்று இரவு முதல் இராப்பத்து விழாவும் தொடங்குகிறது. சொர்க்க வாசல் திறப்பையொட்டிஸ்ரீரங்கத்திற்கு பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிநடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+