சென்னை பஷீர் விடுவிப்பு: பெங்களூரில் இருந்து இன்னொரு படை வந்தது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) நடந்த தாக்குதல் தொடர்பாக தீவிரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பஷீர்,எந்த ஆதாரமும் கிடைக்காததால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பெங்களூரில் இருந்து தீவிரவாதிகளைத் தேடி மேலும் ஒரு தனிப்படை இன்று சென்னைக்கு வந்துள்ளது.

கடந்த 28ம் தேதி பெங்களூர் ஐஐஎஸ்சி மீது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் விஞ்ஞானி பூரி கொல்லப்பட்டார். இந்த சம்பவம்தொடர்பாக ஹைதராபாத் அருகே உள்ள நலகொண்டாவில் அப்துல் ரகுமான் என்பவைர பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.அவரை பெங்களூர் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவர் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தென் இந்திய கமாண்டர் என்று போலீசார் கூறுகின்றனர். ஆனால், அவர் செளதிஅரேபியாவில் சுய தொழில் செய்துவிட்டு சமீபத்தில் தான் ஆந்திராவுக்கே வந்துள்ளார். இதனால் அவர் தென் இந்தியகமாண்டராக செயல்பட்டதாக பெங்களூர் போலீஸ் சொல்வதை மத்திய உளவுப் பிரிவினர் ஏற்கவில்லை.

இந் நிலையில் அப்துல் ரகுமானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சென்னையில் பஷீர் என்பவைர பெங்களூர் போலீசார்கைது செய்து விசாரித்து வந்தனர்.

ஆனால், அவர் திருக்குரான் அச்சிடுவதற்காகவே சென்னை சென்றதாக தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார்விடுவிடுத்துள்ளனர்.

பஷீர் கைதை தொடர்ந்து பிஜப்பூரை சேர்ந்த ஒருவரையும் பெங்களூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தீவிரவிசாரணை நடத்தி வந்ததால் முக்கிய குற்றவாளி பிடிபடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பஷீர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் ஐஐஎஸ்சி மீது தாக்குதல் நடத்த, கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளனர் என்ற விவரம்தெரிந்துள்ளது. இதில் முக்கிய தகவல், தொழில் நுட்ப மையங்கள், அறிவியல் மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக தீவிரவாதிகள் காஷ்மீரிலிருந்து பெங்களூர் வந்து சென்ற விவரம் தற்போதுவெளியாகியுள்ளது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு தீவிரவாதிகள் பெங்களூரில் ஊடுருவி இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. மத்தியஉளவுத்துறையினர் பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் தீவிரவாதிகள் தங்கியிருப்பிதாக பெங்களூர் போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து போலீசார் ஓட்டல்களில் சோதனை நடத்தி கொண்டிருந்த போதே மெஜஸ்டிக் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்தங்கியிருந்த 6 தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெங்களூர்போலீசார் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

தீவிரவாதிகள் யாரும் பெங்களூருக்குள் வரவில்லை என்று கூறினார். ஆனால் அப்போது பெங்களூர் ராணுவ தளவாட மையத்தின்வெளியே காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரப் பட்டார் என்பவரின் தேர்தல் அடையாளஅட்டையை ரகசிய போலீசார் கண்டெடுத்தனர் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

எனவே ராணுவ தளவாட ஆய்வு மையத்தை தகர்த்த முயற்சி செய்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இந் நிலையில் பெங்களூர் தாக்குதலுக்கு பின் காஷ்மீர் போலீசார் முகமது அஸ்ரப் பட்டாரை பிடித்து விசாரித்து வருவதாகக்கூறப்படுகிறது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாக காஷ்மீர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்அவர் கைதாவார் என்று கூறப்படுகிறது.

சென்னையில் மேலும் ஒரு தனிப்படை:

இந் நிலையில் பெங்களூரில் இருந்து தீவிரவாதிகளைத் தேடி மேலும் ஒரு தனிப்படை இன்று சென்னைக்கு வந்துள்ளது.

என்ன தகவலின் பேரில் அவர்கள் சென்னை வந்துள்ளனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சென்னையில் அவர்கள் தீவிரதேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதை தமிழக போலீஸ் வட்டாரங்கள் உறுதி செய்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+