தேர்தல்-கூடுகிறது அதிமுக செயற்குழு, பொது குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெறும் என முதல்வரும், அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னைவடபழனியில் உள்ள விஜயசேஷ மஹாலில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் நடைபெறும்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.அழைப்பிதழ்களுடன் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications