ரூ. 4 கோடி ஹெராயின் கடத்த முயற்சி
தூத்துக்குடி:
தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு ரூ. 4 கோடி ஹெராயின் கடத்த முயன்ற இருவர் பிடிபட்டனர்.
சென்னையில் சில நாட்களுக்கு முன் இலங்கைக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்தியதாக ஜபருல்லா, தளபதிஆகியோரை போதைப் பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியிலிருந்துஇலங்கைக்கு ஹெராயின் கடத்தப்படவிருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து கடலோர காவல்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கூட்டு ரோந்து மேற்கொண்டனர்.அப்போது தூத்துக்குடி கேம்ப்- 2 அருகே நள்ளிரவில் சந்தேகப்படும் வகையில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த தங்கதுரை(வயது44), வேப்பலோடை மரிய சிலுவை (வயது 45) ஆகிய 2 பேரைப் பிடிக்க முயன்றனர்.
இதில் தங்கதுரை போலீசாரிடம் சிக்கினார். மரிய சிலுவை தப்பியோடினார். அவரை போலீசார் துரத்திச் சென்று துறைமுகத்தில்வைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்த பையில் 4 கிலோ ஹெராயின் இருந்தது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 4.1கோடியாகும்.
கைதான இருவரும் மாலை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கபீர்உத்தரவிட்டார். இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications