பக்ரீத்: கலாம், சிங், பர்னலா, ஜெ வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், தமிழக ஆளுநர்பர்னாலா, முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அப்துல் கலாம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்தியா மற்றும்வெளி நாட்டில் வசிக்கும் மக்களுக்கும், இந்த வருடம் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட மக்களுக்கும் என்னுடைய பக்ரீத்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந் நன்னாளில் மனதை செம்மைப்படுத்தி மனித சேவையில் ஈடுபடுபட வேண்டும். மேலும் நாட்டின் வளத்திற்கும்,மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள தமது வாழ்த்து செய்தியில், பக்ரீத் பண்டிகை வறுமையில் வாடும் மக்களுக்கும்,இயலாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற பொறுப்பை நமக்கு உணர்த்துகிறது. மேலும் இப்ராஹிமின் அரிய தியாகத்தைநினைவு படுத்துகிறது.

பக்ரீத் பண்டிகை, நமது பொறாமை, அகந்தையை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுத் தருகிறதுஎன்று கூறியுள்ளார்.

பர்னாலா தனது வாழ்த்துச் செய்தியில், தியாகத் திருநாளான பக்ரீத் நாளில் மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ உறுதிஎடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா தமது வாழ்த்து செய்தியில், ஆண்டவனின் கட்டளையை நிறைவேற்ற இப்ராஹிம் செய்த அரியதியாகத்தை நினைவு கூறும் நாள் தான் பக்ரீத் திருநாள். இந்த நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இஸ்லாமியபெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொருவரும் இந்த நாளில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியைஏற்படுத்த உறுதியேற்று, மாநிலத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாஜக எம்பி திருநாவுக்கரசர் தமது வாழ்த்து செய்தியில், பக்ரீத் திருநாளில் உலக மக்களிடையே சகிப்புத்தன்மையும்,சகோதரத்துவமும் வளரட்டும்என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+