பிப்ரவரியில் மார்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் அறிக்கை
கோயம்பத்தூர்:
பிப்ரவரி மாதம் 18ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய குழு உறுப்பினர் என். சங்கரய்யா கூறியுள்ளார்.
இது குறித்து சங்கரய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:கோவையில் பிப்ரவரி 18ம் தேதி நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கராத்தலைமை தாங்குவார். அப்போது அதிமுக அரசை வரும் தேர்தலில் தோற்கடிப்பதற்கான தேர்தல் வியூகம், தேர்தல் அறிக்கைகுறித்து விவாதிக்கப்படும்.
திமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் தொடர்ந்து வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும். ஆட்சியில் பங்கேற்பதில் கட்சிக்குவிருப்பமில்லை. தொகுதி பங்கீடு பற்றி தக்க சமயத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் மற்றும் மாநிலக் குழுவினர்தலைவர்களுடன் விவாதிப்பார்கள்.
மதவாத பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காகத் தான் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவுஅளிக்கிறோம் என்றார் சங்கரய்யா.












Click it and Unblock the Notifications