தர்மபுரி பஸ் எரிப்பு: கடைசி சாட்சி விசாரணை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தர்மபுரியில் கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்தை அதிமுகவினர் தீ வைத்து எரித்து 3 மாணவிகளைக் கொலை செய்தவழக்கில் கடைசி சாட்சியிடம் இன்று சேலம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையைஎதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினர். இதில் தர்மபுரி அருகே கோவை விவசாய பல்கலைக்கழகமாணவ, மாணவியர் வந்த பேருந்தை அதிமுகவினர் தீ வைத்து எரித்தனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர். இந்த வழக்கு முதலில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டது. ஆனால், அங்கு போலீசாரும் குற்றவாளிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு விசாரணையை கேலிக் கூத்தாக்கினர்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எரிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தந்தை வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்துபோலீசாருக்கும் தமிழக அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இந்த வழக்கை சேலம் முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றியது. அரசு வழக்கறிஞரையும் மாற்றியது.

அங்கு அரசு, போலீசாரின் பல்வேறு தடைகளையும் தாண்டி விசாரணையை நடத்தி வருகிறார் நீதிமன்றம் நியமித்த அரசுவழக்கறிஞர். நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் மொத்தம் உள்ள 386 சாட்சிகளில், 123 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது.அதன்படி சாட்சிகள் விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வந்தது. 122 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். கடைசிசாட்சி இன்று விசாரிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுப் படை அதிகாரியாக இருந்து விசாரணை மேற்கொண்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த கூடுதல் எஸ்.பி.சமுத்திரப்பாண்டியன் இன்று கடைசி சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றும் சமுத்திரப்பாண்டியன்சாட்சியம் அளிக்கிறார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு வக்கீல்களின் வாதம் நடைபெறும்.

வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும்என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+