மார்ச் 2ல் பிளஸ்டூ: 29ல் எஸ்எஸ்எல்சி தேர்வுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்திற்குள்இந்தத் தேர்வுகள் முடிவடைகின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறக் கூடும் என பேச்சு அடிபடுகிறது.ஆனாலும், பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் தேதிகளைப் பொறுத்தே தேர்தல் தேதியை நிர்ணயிக்க மத்திய தேர்தல்ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து ஏப்ரலில் தேர்தலுக்குத் தயார் என்பதை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்கும் வகையில் பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சிதேர்வுகளின் தேதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 29ம் தேதியும் தொடங்குகின்றன.

ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகளும் மார்ச் 29ம் தேதியே தொடங்குகின்றன. மெட்ரிகுலேஷன் தேர்வுகள் மார்ச் 27ல் தொடங்குகின்றன.

பிளஸ்டூ தேர்வுக்கான கால அட்டவணை:

மார்ச் 2 - தமிழ் முதல் தாள்

மார்ச் 3- தமிழ் இரண்டாம் தாள்

மார்ச 6 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச 10 - இயற்பியல், வரலாறு

மார்ச் 13 - வேதியியல்

மார்ச் 16 - உயிரியல், தாவரவியல்

மார்ச் 20 - விலங்கியல், கணிதம்

மார்ச் 21 - பொருளாதாரம்

மார்ச் 22 - கம்ப்யூட்டர் அறிவியல்

மார்ச் 23 - கணக்கியல்

மார்ச் 24 - பயோ கெமிஸ்ட்ரி

தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணை:

மார்ச் 29 - தமிழ் முதல் தாள்

மார்ச் 30 - தமிழ் 2ம் தாள்

ஏப்ரல் 3 - ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 4 - ஆங்கிலம் 2வது தாள்

ஏப்ரல் 5 - கணிதம்

ஏப்ரல் 7 - அறிவியல்

ஏப்ரல் 10 - சமூக அறிவியல்

காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும்.

ஏப்ரல் முதல் வாரத்திற்குள் இரு முக்கியத் தேர்வுகளும் முடிவடைந்து விடுகின்றன.

அதே போல பொறியியல் கல்லூரிகளின் தேர்வுப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத்திடம் தேர்தல் ஆணையம்கோரியுள்ளதாகத் தெரிகிறது. பல்கலைக்கழகமும் தமிழக அரசின் விருப்பத்திற்கேற்ப ஏப்ரல் முதல் வாரத்திற்குள் எல்லாதேர்வுகளை நடத்தி முடித்துவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஏப்ரல் இறுதியில் சட்டசபைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் இரண்டாம்வாரத்தில் வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கக் கூடும் எனத் தெரிகிறது. ஏப்ரல் கடைசியில் அல்லது மே முதல் வாரத்தில் வாக்குப்பதிவு இருக்கும் எனவும் தெரிகிறது.

மழை, வெள்ளத்தால் பெரும்பான்மையான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால் தேர்வுகள் ஒரு மாதம் தள்ளி வைக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு தேர்வுகள் தள்ளி வைப்பது தொடர்பாக எந்தவிதநடவடிக்கையும் எடுக்காமல் வழக்கம் போல் நடத்துவதற்கு தேர்வுத்துறை தயாராகியுள்ளது.

மே இரண்டாம் வாரத்துக்கு முன்பே தேர்தலை சந்திப்பது உசிதம் என போயஸ் தோட்டத்துக்கு ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கேரளா, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி உள்ளிட்ட தேர்தலை சந்திக்கும் பிற மாநிலங்களிலும் தேர்வுத் தேதிகளைமனதில் வைத்து இந்த மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+