சிறையில் முருகன்-நளினியுடன் மகள் உருக்கமான சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Aritraராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் நளினியைஅவர்களது மகள் ஆரித்ரா 8 வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன்இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது.

முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. முருகன் தாக்கல் செய்துள்ள கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவரின்பரிசீலனையில் உள்ளது.

இவர்களது மகள் ஆரித்ரா தனது 6 வயது வரை வேலூர் சிறையிலேயே நளினியுடன் இருந்தார்.8 ஆண்டுகளுக்கு முன்பு அவர்தந்தை வழிப் பாட்டியான நேசமணியுடன் இலங்கைக்கு சென்றார்.

இப்போது 14 வயதாகிவிட்ட ஆரித்ரா, தனது பெற்றோரைக் காண விரும்பினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்தியதூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தனர் முருகன் குடும்பத்தினர்.

ஆனால், விசா கொடுப்பதில் இந்திய தூதரகம் தாமதம் செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்குதொடர்ந்தார். முருகன் சிறையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதையடுத்து உடனடியாக ஆரித்ராவின் விசா விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து விசா வழங்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆரித்ராவுக்கு விசா கிடைத்தது. இதையடுத்து தனது பாட்டியுடன் சென்னை வந்தார் ஆரித்ரா. அவர்கள்தங்கியிருக்கும் இடத்தை போலீஸார் படு ரகசியமாக வைத்திருந்தனர்.

இந் நிலையில் இன்று நளினியின் தாயார் பத்மா, நேசமணி மற்றும் ஆரித்ரா ஆகியோர் வேலூர் சென்றனர்.

அங்கு முதலில் நளினியை மகளிர் சிறைக்கு சென்று ஆரித்ரா சந்தித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்தது. 8ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகளை, நன்கு வளர்ந்த நிலையில் சந்தித்த நளினி கண்ணீர் விட்டு அழுதார். ஆரித்ராவும்உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தாயிடம் பேசினார்.

அதன் பின்னர் தந்தை முருகனை ஆரித்ரா சந்தித்தார். இருவரையும் சந்தித்து நீண்ட நேரம் பேசிய பின்னர் ஆரித்ராவும் அவரதுபாட்டிகளும் வெளியில் வந்தனர். ஆரித்ராவை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள முயன்றனர். இருப்பினும் அவரதுமுகத்தை கருப்புத் துணியால் மூடியபடி இரு பாட்டிகளும் பத்திரமாக அழைத்துச் சென்று விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+