கவர்னர் உரையை புறக்கணிக்கும் திமுக-பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழர்களின் முக்கிய பண்டிகையான போகியன்று சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்டுவதை எதிர்த்து பேரவையின் முதல் நாள்கூட்டத்தையும் அன்றைய கவர்னர் உரையையும் புறக்கணிக்க திமுக, பாமக ஆகியவை முடிவு செய்துள்ளன.

வரும் 13ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் சட்டசபைக்கூட்டம் தொடங்கும். தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் கவர்னர் உரையில் இடம் பெறும். இந்த உரையை உருவாக்கித்தருவது தமிழக அரசு தான்.

ஆனால், இந்த ஆண்டு போகிப் பண்டிகை தினத்தில் சட்டசபையை அரசு கூட்டியுள்ளது. இதற்கு திமுகவும் பாமகவும் கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல்ஆகியவற்றை 3 நாட்கள் தமிழர்கள் கொண்டாடுவார்கள்.

இந் நிலையில் போகிப் பண்டிகையன்று சட்டசபையைக் கூட்டியிருப்பது தமிழர்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். அந்தப்பண்டிகைகளுக்கு தமிழக அரசு மரியாதைத் தரத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே போகி தினத்தன்றுகூடும் சட்டசபைக் கூட்டத்தை திமுக புறக்கணிக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் மரபுகளையும் தமிழர்களின் கலாசாரத்தையும் சீரழிக்கும் செயல்கள் திட்டமிட்டு நடந்து வருகின்றன. போகிப் பண்டிகைதினத்தில் சட்டப் பேரவையைக் கூட்டி, அன்று ஆளுநர் உரையை வைத்திருக்கும் இந்த அரசின் நடவடிக்கை இதற்கு ஒருஉதாரணம்.

ஆண்டுதோறும் போகி, பொங்கல், திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடி மகிழ்வதுமரபாக உள்ளது. அதிகாலை பொழுதில் தமிழர்கள் குடும்பத்தோடும் உற்றார் உறவினர்களோடும் பொங்கல் பண்டிகையைகுடும்பத்தினரோடு கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆனால் ஆளுநர் உரைக்காக சென்னை வரும் சட்டப் பேரவை உறுப்பினர்களால் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினரோடுகொண்டாடி மகிழ்வதற்கு உரிய நேரத்தில் போய்ச் சேர முடியாது. எனவே, போகியன்று சட்டசபை கூட்டுவது தமிழர்களை இழிவுபடுத்தும் செயலாகும். பொங்கலைக் கொண்டாடக் கூடாது என்று நடக்கும் சதி இது. அரசின் இந்தச் செயலை வன்மையாககண்டிக்கிறோம்.

இதற்கு அடையாளமாக பேரவையின் அன்றைய கூட்டத்தை புறக்கணிக்க அனுமதிக்க வேண்டும் என பாமக எம்எல்ஏக்கள்கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது உணர்வு நியாயமானது.

போகிப் பண்டிகையின் போது பேரவைக் கூட்டத்தை கூட்டி தமிழர்களை இழிவு படுத்திய அரசின் செயலைக் கண்டித்தும் அதற்குஎதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாகவும் பேரவையின் முதல் நாள் கூட்டத்தை பாமக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பார்கள் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+