சகோதரியை கற்பழித்த அண்ணன்: 31 ஆண்டு சிறை
சேலம்:
சகோதரியை கற்பழித்து, ஆசிட் வீசி கொலை செய்த வழக்கில், காமக் கொடூர அண்ணனுக்கு தனித்தனி பிரிவுகளில் மொத்தம் 31ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம், சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் லெனின் பாக்கியசாமி. இவரது இரண்டாவது மனைவி யோகலட்சுமி. இவரது மகள்புவனேஸ்வரி (வயது 17). இவர் சேலம் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். லெனின் பாக்கியசாமியின் முதல்மனைவியின் மகன் செல்வம் (வயது 35). தனது சின்னம்மா யோகலட்சுமி வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.அப்போது, சகோதரி புவனேஸ்வரியை வெளியில் அழைத்து சென்று வருவார். யோகலட்சுமி இல்லாத போது வீட்டுக்கு வரும்செல்வம், தனியாக இருக்கும் புவனேஸ்வரியை கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வந்து புவனேஸ்வரியைசெல்வம் கற்பழித்து கொடுமைபடுத்தியுள்ளார். இதில் புவனேஸ்வரி கர்ப்பம் அடைந்தார்.
அவரை வலுக்கட்டாயப்படுத்தி செல்வம் கருக்கலைப்பு செய்தார். தொடர்ந்து வற்புறுத்தி செல்வம் கற்பழித்து வந்ததால், அவர்மீது வெறுப்படைந்த புவனேஸ்வரி, செல்வத்துடன் பேசுவதை நிறுத்தி கொண்டார். இந் நிலையில், புவனேஸ்வரிக்கு, ரமேஷ்என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2005 பிப்ரவரி மாதம் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாழப்பாடி புறப்பட்டு செல்லும் டவுன் பஸ்சில் ரமேஷ்அமர்ந்து இருந்தார். புவனேஸ்வரி பள்ளியில் ப்ராக்ட்டிக்கல் தேர்வை முடித்து விட்டு மதியம் பஸ் ஸ்டாண்ட் வந்தார். ஏற்கனவே,பஸ்சில் காத்திருந்த ரமேஷின் அருகில் அமர்ந்து புவனேஸ்வரி பேசி கொண்டிருந்தார்.
தங்கை புவனேஸ்வரி தன்னை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் பேசுவதை பிடிக்காத செல்வம், மறைத்து எடுத்து வந்திருந்தஆசிட்டை வீசி எறிந்தார். இதில், புவனேஸ்வரின் முகம், உடல் மீது ஆசிட் பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தரமேஷின் மீதும் ஆசிட் பட்டது. இதில், அவரும் காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த புவனேஸ்வரியை சேலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சில நாட்கள் சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த புவனேஸ்வரி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி இறந்தார்.
இதுசம்பந்தமாக டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை சேலம் மாவட்ட தலைமை நீதிபதி முருகானந்தம்முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், சகோதரி என்று கூட பார்க்காமல் கட்டாயப்படுத்திகற்பழித்து கருக்கலைப்பு செய்து, பின், ஆசிட் வீசி கொலை செய்த செல்வத்துக்கு தனித்தனி வழக்குகள் பிரிவின் கீழ் தண்டனைவழங்கினார்.
இபிகோ 376 (கற்பழிப்பு) பிரிவின் கீழ் 7 ஆண்டும் , இபிகோ 302 (கொலை) பிரிவின் கீழ் 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும்,இபிகோ 307 (கொலை முயற்சி) பிரிவு கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், இபிகோ 312 (கருக்கலைப்பு) பிரிவு கீழ் 3 ஆண்டுசிறை தண்டனையும் என மொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
மேலும், கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி ஆகியவற்றுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ. 3,000 அபராதம் கட்டவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.












Click it and Unblock the Notifications