பக்ரீத்: ஒட்டகம் வெட்டத் தடை இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பக்ரீத் பண்டிகையன்று ஒட்டகம் பலியிடுவதற்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலியிடுவதற்காக 68 ஒட்டகங்கள் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த நிலையில், ஒட்டகத்தைப் பலியிடுவதற்குத் தடை கோரி சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்குமாறு அவர் கோரியதால், நீதிபதிபானுமதியின் வீட்டில் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி பானுமதியுடன், நீதிபதி தனபாலனும் விசாரணைமேற்கொண்டார்.

இந்த விசாரணையின் இறுதியில், ஒட்டகங்கள் எங்கே தங்க வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சுகாதார நிலை என்ன, அவைஎப்படிப் பலியிடப்படவுள்ளன என்பது குறித்த விவரங்களை மனுதாரர் இணைக்கவில்லை. மேலும் சென்னை மாநகராட்சிசுகாதார அதிகாரியை இதில் எதிர் மனுதாரராக மனுதாரர் சேர்க்கவில்லை.

எனவே ஒட்டகங்களைப் பலியிடுவதற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கைவருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலாளர், மாநகரகாவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+