போகி: டயர், பிளாஸ்டிக்குகளை எரிக்க தடை
சென்னை:
போகிப் பண்டிகையன்று டயர், பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டு எரிக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.
பொங்கல் திருநாளின் முதல் நாள் விழாவாக போகிப் பண்டிகை 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில்உள்ள பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற தத்துவத்தின்அடிப்படையில் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.சமீப காலமாக போகிப் பண்டிகையன்று, வீட்டில் உள்ள பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டுகொளுத்துவது வழக்கமாகி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி டயர், பிளாஸ்டிக்குகளை போட்டுஎரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், போகிப் பண்டிகையன்றுடயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே போகியன்று இந்தப் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தக் கூடாது. டயர், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்துவோரைக்கண்காணிக்க நகரின் முக்கியப் பகுதிகளில் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் இவ்வாறுசெய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இதேபோல, குடிசைப் பகுதிகள், பெட்ரோல் நிலையங்களுக்கு அருகே பழைய பொருட்களை தீவைத்து எரிப்பதையும் தவிர்க்கவேண்டும்.
பொங்கலையொட்டி கோவில்கள், மெரீனா கடற்கரை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. போலீஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் நடராஜ்.












Click it and Unblock the Notifications