சேதுக் கால்வாய் - ஒரு பார்வை: பழ.நெடுமாறன் வெளியிட்டார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் திமுக மற்றும் மதிமுக செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள சேதுக் கால்வாய்ஒரு பார்வை என்ற நூலை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டார்.
மதிமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். பின்னர் திமுகவில் இணைந்து அங்கு செய்தித்தொடர்பாளராக இருந்து வந்தார். திமுகவிலிருந்து சில காலத்திற்கு முன்பு விலகிய ராதாகிருஷ்ணன் பின்னர் அதிமுகவில்சேர்ந்தார்.தற்போது அதிகவிலிருந்தும் விலகியுள்ள ராதாகிருஷ்ணன் நூல் எழுதும் பணியில் மும்முரமாக உள்ளார். வழக்கறிஞரானராதாகிருஷ்ணன் தற்போது சேதுக் கால்வாய் ஒரு பார்வை என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வழக்கறிஞர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். முதல் பிரதியை தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட அதை ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications