ஜெ.வின் எதேச்சதிகாரம்: கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போகிப் பண்டிகையன்று சட்டசபைக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டாம் என பல கட்சிகள் வற்புறுத்திய நிலையிலும், அதைஏற்காமல் கூட்டத் தொடரை போகியன்று கூட்டியிருப்பது முதல்வர் ஜெயலலிதாவின் எதேச்சதிகார போக்கையே காட்டுகிறதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு போகிப் பண்டிகையன்றுசட்டசபைக் கூட்டத் தொடரை கூட்டியுள்ளது ஜெயலலிதா அரசு.

இது தமிழர்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் செயல் என்று கூறி போகியன்று நடக்கும் கூட்டத்தை திமுக மற்றும் பாமகஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.

போகியன்று கூட்டத்தைக் கூட்ட வேண்டாம். மாறாக 16ம் தேதி ஆளுநர் உரையுடன் கூட்டத்தைத் தொடங்கலாம் என திமுகஉள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஜனநாயக முறையில் கோரியும் கூட அதைப் புறக்கணித்து விட்டு, போகிப்பண்டிகையன்றே கூட்டத்தைக் கூட்ட ஜெயலலலிதா அரசு முடிவு செய்திருப்பது, ஜெயலலிதாவின் எதேச்சதிகாரமனப்பான்மையையே காட்டுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே உழவர் பெருமக்கள் இந்த அரசின் கீழ் பல்வேறு துயரங்களை சந்தித்து வந்துள்ளனர். அந்தத்துயரப் பட்டியல் மிகவும் நீளமானது.

சென்னையில் ஓரிரு நிமிடங்களில் 53 உயிர்கள் பலியானதை நினைத்துப் பார்த்தாலே, பொங்கல் திருநாளும், சர்க்கரைப்பொங்கலும் இனிக்காது. இருப்பினும் நமது இனத்தின் திருநாள் என்ற வகையில் பொங்கல் பண்டிகையை நினைத்துப்பார்த்தாலே இனிக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+