பாமக எம்.பியின் 104 வயது தாய் மரணம்; அதிர்ச்சியில் 109 வயது தந்தையும் இறந்தார்
திருவண்ணாமலை:
முன்னாள் மத்திய அமைச்சரும், சிதம்பரம் தொகுதி பாமக எம்.பியுமான பொன்னுச்சாமியின் 104 வயது தாயார்மரணமடைந்தார். அவர் இறந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத பொன்னுச்சாமியின் 109 வயது தந்தையும் உயிரிழந்ததுபொன்னுச்சாமியின் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சராக இருந்தவர் பொன்னுச்சாமி. தற்போது சிதம்பரம் தொகுதி பாமக எம்.பியாகஉள்ளார். இவரது சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் கிராமம்.
பொன்னுச்சாமியின் 109 வயது தந்தை எட்டியப்பன், தாயார் ஆனந்தாயி (104 வயது) ஆகியோர், கங்கம்பூண்டி என்ற கிராமத்தில்உள்ள அவர்களது மகள் பாக்யலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தனர்.
சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த ஆனந்தாயி திங்கள்கிழமை இரவு மரணமடைந்தார். இதையடுத்து அவரதுஉடலை கீழ் சாத்தமங்கலம் கொண்டு சென்றனர். 80 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் இணை பிரியாமல் இருந்து வந்தஆனந்தாயி இறந்த துக்கம் தாளாமல் எட்டியப்பன் அதிர்ச்சி அடைந்தார். உடலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து அழுதபடி இருந்தார்.
தாயின் மரணச் செய்தி கேட்டதும், கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பொன்னுச்சாமி சொந்த ஊருக்குத் திரும்பினார்.அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதாவது எட்டியப்பனும்மரணமடைந்தார்.
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்த அவர், அந்த துக்கத்திலேயே இறந்து போனார். இதனால் கிராமமே சோகத்தில்மூழ்கியது. பொன்னுச்சாமியும் வேதனை அடைந்தார்.
தனது பெற்றோரை சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்தார். இருவருக்கும் ஒரே பாடை கட்டப்பட்டு, உடல்கள் தூக்கிவரப்பட்டு, பொன்னுச்சாமியின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள அவரது நிலத்தில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
பொன்னுச்சாமியின் தாய், தந்தை இறந்த செய்தி அறிந்ததும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, மகள்கவிதா, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, திண்டிவனம் தொகுதி எம்.பி. தன்ராஜ் உள்ளிட்டோர் சென்று அஞ்சலிசெலுத்தி, பொன்னுச்சாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.