நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைஅமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு சித்தா, யுனானி, இயற்கை மருத்துவம்மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் ஏராளமான அளவில் உள்ளன. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்துக்கு மட்டும்இதுவரை அரசு கல்லூரிகள் எதுவும் இல்லை.

தனியார் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களால் அதில் சேர்ந்துபடிக்க முடியவில்லை.

இதை உணர்ந்து, அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கஉத்தரவிட்டுள்ளேன். தற்போது மாவட்ட மருத்துவமனை இயங்கி வந்த இடத்தில் இந்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும்மருத்துவமனை நிறுவப்படும்.

இதற்காக ரூ. 1.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தொடர் செலவீனங்களுக்காக ஆண்டு தோறும் ரூ. 1.49 கோடிவழங்கப்படும். இக்கல்லூரிக்குத் தேவையான ஆசிரியர்கள், மாணவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள்.

ஆயுர் வேதம் பயில விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு இந்த கல்லூரி பெரும் வரப் பிரசாதமாக இருக்கும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+