3.28 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 கோடியே 28 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி ஜனவரி14ம் தேதி முதல் தொடங்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களுக்குஎனது அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது.

இதன் மூலம் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த சேலை மற்றும்வேட்டிகள் தரத்துடன் தயாரிக்கப்பட்டதால் அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு 1 கோடியே64 லட்சம் பேருக்கு வேட்டியும், அதே அளவிலான பெண்களுக்கு இலவச சேலையும் வழங்கப்படும்.

ரூ. 256 கோடி மதிப்பில் இந்த சேலை, வேட்டிகள் வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடியே 28 லட்சம் பேர் பயன் அடைவர்.

ஜனவரி 14ம் தேதி தொடங்கி மார்ச் 15ம் தேதி வரை இவை வழங்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 1கோடியே 6 லட்சம் பேர் இலவச வேட்டி, சேலையைப் பெறவுள்ளனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+