சென்னை: போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெண் மார்ஷல்கள்
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பெண் போலீஸார் (மார்ஷல்கள்) ஈடுபடுத்தப்படவுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழகத்தில் தான், கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. அதே போல இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோ படையும் ஜெயலலிதாஆட்சியில் தான் நிறுவப்பட்டது.இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பெண் போலீஸார்ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு போக்குவரத்து பெண் போலீஸ் மார்ஷல்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்காக 23 பெண் போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில்இவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர்.
பெண் போலீஸ் மார்ஷல் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை மெரீனாகடற்கரையில் தொடங்கி வைக்கிறார். இதே நிகழ்ச்சியில், சென்னை மாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 56 போக்குவரத்துசிக்னல்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications