நாளை கூடுகிறது தமிழக சட்டசபை: எதிர்க் கட்சிகள் கூண்டோடு புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.

இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பர்னாலா உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைக்கிறார். தமிழர்திருநாளான போகிப் பண்டிகையன்று சட்டமன்றம் கூட்டப்படுவதை எதிர்த்து திமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள்அவையின் முதல் நாள் கூட்டத்தைப் புறக்கணிக்கின்றன.

வெள்ள நிவாரணப் பணிகளை அரசு முறையாக செய்யாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்ஆகியவையும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கின்றன.

இதனால் முக்கிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லாமல் அவை கூட்டப்படுகிறது. இதில் பாஜக கலந்து கொள்ளப்போகிறது.

முதல் நாள் கூட்டம் ஆளுநர் உரைக்குப் பின் முடிவடைந்துவிடும். பின்னர் எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

இதையடுத்து பொங்கல் விடுமுறை விடப்படும். பின்னர் 16ம் தேதி மீண்டும் அவை கூடும். அப்போது இந்த ஆண்டுக்கானஇடைக்கால பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யும், அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடக்கும்.

கூட்டத் தொடர் ஒரு வாரமே நடக்கும் என்று தெரிகிறது. வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் வருவதால் இந்த அவையின்கடைசிக் கூட்டமாக இது இருக்கும்.

வெள்ள நிவாரணம், எதிர்க் கட்சியினர் மீது வழக்கு ஆகிய விவகாரங்களை எதிர்க் கட்சிகள் எழுப்பவுள்ளதால் கூட்டத் தொடர்மிக பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

கம்யூ. கட்சிகள் புறக்கணிப்பு:

ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக முதலில் பாமகவும் பின்னர் திமுகவும் அறிவித்த நிலையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்மற்றும் காங்கிரஸ் ஆகியவை இன்று அவைப் புறக்கணிப்பை அறிவித்தன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் போகியைக் காரணம் காட்டாமல், மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ளகூட்டறிக்கையில், தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மக்கள் பெரும்பாதிப்புக்குஆளானார்கள்.

குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பயிர்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றையும்இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்தப் பேரிழப்புகளை ஈடுகட்டும் முறையான நிவாரணப் பணிகளையும், புனர்வாழ்வு ஏற்பாடுகளையும் தமிழக அரசுமேற்கொள்ளவில்லை என்பதை தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

அரசின் தவறான அணுகுமுறையால் நிவாரணம் பெறச் சென்றவர்களில் 49 பேர்க உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வளவுக்குப் பிறகும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து நிவாரணப் பணிகளை முறைப்படுத்த அரசு தயாராக இல்லை.அதற்கு மாறாக பொய் வழக்குப் போட்டு, பழிவாங்கும் போக்கினை அரசு மேற்கொள்கிறது.

இதையெல்லாம் எதிர்த்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநில அளவில் போராடி வருகிறோம். மக்கள் நலனை மறந்துஇந்த அரசு செயல்படும் நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுனர் உரையாற்றும்போது அந்த உரையை மார்க்சிஸ்ட்மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்து மாநில அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்றுகூறியுள்ளனர்.

காங்கிரசும் புறக்கணிப்பு:

இந்த விவகாரத்தில் இன்று வரை அமைதி காத்த முக்கியக் கட்சியான காங்கிரஸ் இன்று அவைப் புறக்கணிப்பை அறிவித்தது.

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், தமிழர் பண்டிகை தினம் முக்கியமானவிடுமுறை நாள் என்று தெரிந்தும், அந்த தினத்தை மதிக்காமல், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மரியாதை தராமல் அவையைபிடிவாதமாக நாளை கூட்டியுள்ளது அதிமுக அரசு.

மேலும் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த தினமான வரும் 17ம் தேதியைக் கூட கணக்கில் எடுக்காமல் அவையைக்கூட்டியுள்ளனர். இதன்மூலம் மறைந்த அந்த தலைவரையும் அவமானப்படுத்திவிட்டார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+