மண் சரிவு: விழுப்புரம் அருகே 3 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஏரியில் மண் எடுக்கச் சென்ற 3 குழந்தைகள் மீது மண் சரிந்ததில் அவர்கள் மூச்சுத் திணறி பலியாயினர்.கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் பொங்கலையொட்டி வீட்டை மராமத்து செய்யும் பணியில் கிராமத்தினர்ஈடுபட்டனர்.
இதற்காக அருகே உள்ள ஏரியில் இருந்து மண் எடுக்க வாணி (13), செல்வம் (10), யுவராஜ் (5) ஆகியோர் சென்றனர்.
மூவரும் ஏரியில் பள்ளத்தில் இறங்கி குகைபோல தோண்டப்பட்ட பகுதியில் இருந்து மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மூன்று குழந்தைகளையும் மண் மூடியது. இதில் மூவரும் மூச்சுத் திணறி பலியாயினர்.
மூவரது உடல்களையும் கிராம மக்கள் மீட்டனர்.












Click it and Unblock the Notifications