பட்ஜெட் சாதாரண மக்களை பாதிக்காது: ப.சி
டெல்லி:
சாதாரண மக்களை பாதிக்காத வகையில் 2006-07ம் ஆண்டுக்கான பட்ஜெட் இருக்கும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
இது குறித்து சிதம்பரம் கூறியதாவது:வளர்ச்சிக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று முதலீடு. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முதலீடு அதிக அளவில்இருக்குமானால் 2006-07 ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது.
சாதாரண மக்களை பாதிக்காத வகையிலும் அதே சமயத்தில் நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறையை குறைக்க சிலநடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மிகுந்தகவனம் செலுத்தி வருகிறது.
இயற்கை பேரழிவு ஏற்பட்ட போதிலும் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டுள்ளது.
ரேஷன் அரிசி மற்றும் கோதுமைக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை குறைப்பதா வேண்டாமா என்பது குறித்து அனைத்துகட்சிகளுடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications