கம்யூ. கட்சிகளும் சட்டசபையை புறக்கணிக்க முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக, பாமகவைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் 13ம் தேதி கூடும் சட்டசபைக் கூட்டத்தைப்புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

நநிடப்பு சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை போகிப் பண்டிகையன்று கூடுகிறது. இந்தஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுனர் உரையுடன் கூட்டம் ஆரம்பிக்கிறது.

போகிப் பண்டிகையன்று சட்டசபையைக் கூட்டியிருப்பது தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் செயல் என்று அனைத்துஎதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் ஆளுனர் உரையை புறக்கணிக்கப் போவதாக முதலில் பாமகவும், பின்னர் திமுகவும் அறிவித்தன. திமுகதலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இதுகுறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்தன.

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் 13ம் தேதி நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் போகியைக் காரணம்காட்டாமல், மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி புறக்கணிப்பதாக அவை அறிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ளகூட்டறிக்கையில், தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மக்கள் பெரும்பாதிப்புக்குஆளானார்கள்.

குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பயிர்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றையும்இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்தப் பேரிழப்புகளை ஈடுகட்டும் முறையான நிவாரணப் பணிகளையும், புனர்வாழ்வு ஏற்பாடுகளையும் தமிழக அரசுமேற்கொள்ளவில்லை என்பதை தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

அரசின் தவறான அணுகுமுறையால் நிவாரணம் பெறச் சென்றவர்களில் 49 பேர்க உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வளவுக்குப் பிறகும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து நிவாரணப் பணிகளை முறைப்படுத்த அரசு தயாராக இல்லை.அதற்கு மாறாக பொய் வழக்குப் போட்டு, பழிவாங்கும் போக்கினை அரசு மேற்கொள்கிறது.

இதையெல்லாம் எதிர்த்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநில அளவில் போராடி வருகிறோம். மக்கள் நலனை மறந்துஇந்த அரசு செயல்படும் நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுனர் உரையாற்றும்போது அந்த உரையை மார்க்சிஸ்ட்மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்து மாநில அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்றுகூறியுள்ளனர்.

இன்னொரு முக்கியக் கட்சியான காங்கிரஸ் கட்சி இதுவரை இந்த விஷயத்தில் முடிவு எதையும் தெரிவிக்காமல் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+