டாண்டன் உத்தரவு: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருவாய் மற்றும் காவல்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருவோரை இடமாற்றம் செய்யதலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன் உத்தரவிட்டிருப்பது, அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாண்டன், ஒரேஇடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் இதை அப்படியே நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாதற்போது தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றுவது மிகக் கடினம் என்று அரசு ஊழியர் சங்கங்களும்தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்தி கூறுகையில், தமிழகத்தில் 13 லட்சம் அரசுஊழியர்கள், தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்தல் வரும்போது மட்டுமே இவர்கள் தேர்தல்தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பல்வேறு துறைகளில் இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் அப்படியே இடமாற்றம் செய்வதுசாத்தியமே இல்லாதது. அப்படிச் செய்தால் அரசு நிர்வாகம் சீர்குலைந்து முடங்கிப் போய் விடும்.

மேலும், பத்தாம் மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் நடக்கப் போகின்றன. இந் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம்செய்ய முயன்றால் அது பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

பி கிரேடு வரையிலான ஊழியர்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்று நாங்கள் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்குக்கோரிக்கை விடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் உள்ள நிலையைப் பார்த்து விட்டு, தமிழகத்தில் இடமாற்றம் செய்ய டாண்டன்உத்தரவிட்டிருக்கலாம் என நினைக்கிறோம்.

ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் பாரபட்சமின்றி செயல்படுபவர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறோம். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தேர்தல் அதிகாரி, முதல்வர் ஆகியோருக்கு மனுஅனுப்பியுள்ளோம் என்றார் சூரியமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+