தமிழர் பகுதியில் ராணுவம் வெளியேற புலிகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும் என்று விடுதலை புலிகள் கோரியுள்ளனர்.இலங்கை அதிபராக ராஜபக்ஷே பதவியேற்ற பிறகு சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே அவ்வப்போதுமோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் போர் நிறுத்தம் பாதிக்கப்பட்டு இர தரப்புக்கும் இடையே மீண்டும் போர் வெடிக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் நலன் கருதி போரை தவிர்க்க இரு தரப்பினரும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என்று நார்வே தூதுக்குழு வற்புறுத்தி வருகிறது.
இதையடுத்து தமிழ் எழுச்சி இயக்கத்தின் சார்பில் திரிகோணமலை மாவட்டம் கடற்கரை சேனை என்ற இடத்தில் பேரணிநடைபெற்றது. இதில் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும் என்று வற்புறுத்தி தீர்மானம்நிறைவேற்றப்பட்டதாக விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications