காணும் பொங்கல்: மெரீனாவில் குளிக்க தடை
சென்னை:
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடலில் குளிக்கபோலீஸார் தடை விதித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. 16ம் தேதி காணும் பொங்கல் (அதாவது, உற்றார் உறவினர்கள்,நண்பர்களை நேரில் சந்தித்து இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வது) சென்னையில் கொண்டாடப்படும். அந்த தினத்தில்ஏராளமானோர் கடற்கரையில் கூடுவர்.பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜ் கூறுகையில்,
சென்னை நகரில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெரீனா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை முதல் 3 நாட்களுக்குசென்னை நகரில் போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
காணும் பொங்கலின்போது மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளும், கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு மக்கள்நடமாட்டம் கண்காணிக்கப்படும்.
கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் நடராஜ்.












Click it and Unblock the Notifications