எம்ஜிஆர் பிறந்த நாள்: அதிமுகவின் 4 நாள் கொண்டாட்டம்
சென்னை:
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 89வது பிறந்த நாளையொட்டி வரும் 17ம் தேதி கட்சித்தலைமையகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
மேலும் 4 நாள் விழா நடத்தவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
எம்.ஜி.ஆரின் 89வது பிறந்த நாள் வருகிற 17ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம்சாலையில் உள்ள அதிக தலைமைக் கழகத்தில் கொண்டாடப்படவிருக்கிறது.
அன்று தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுறுவச் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்துமரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் எம்.ஜி.ஆர். 89வது பிறந்த நாள் மலரை ஜெயலலிாத வெளியிடுகிறார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் நான்கு நாட்களுக்கு பொதுக் கூட்டங்கள் நடத்தவும் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்தக் கொண்டாட்டம் நடைபெறும்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பேசவுள்ளனர்.












Click it and Unblock the Notifications