ஆதியின் கூட்டாளியை மா.செ ஆக்கிய விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி :

திருநெல்வேலி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயலாளர் எம்.கணபதி, மோசடி மன்னன் ஆதிகேசவனின்நெருங்கிய கூட்டாளி என்று தெரிய வந்துள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், கடந்த ஆண்டு போலீஸ் வசம் சிக்கினார். உடல் நிறைய ஏகப்பட்டநகைகளுடன் நடமாடும் நகைக் கடையாக நடமாடி வந்த ஆதிகேசவன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தநூற்றுக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியவர்.

ஆதிகேசவனின் கூட்டாளிகள் பலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந் நிலையில் ஆதியின் நெருங்கியகூட்டாளியும் ஆதியின் பல மோசடிகளில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஒருவரை தனது கட்சியின் நெல்லை மாவட்டச்செயலாளராக நடிகர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.

நெல்லை மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் கணபதி. இவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்திநெல்லை, ஆலங்குளத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.என். விஜயன் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனுகொடுத்துள்ளார்.

அதில், நான் ஆலங்குளத்தில் மர வியாபாரம் செய்து வருகிறேன். என்னை அணுகிய கணபதி, பிசினஸை விரிவுபடுத்த நான்ஆதிகேசவனிடம் கடன் வாங்கித் தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து நானும் கடன் வாங்க சம்மதித்தேன். இதற்கானகமிஷனாக ரூ. 6 லட்சம் பணத்தை கணபதி வாங்கிக் கொண்டார்.

ஆனால் கடந்த ஆண்டின் மத்தியில் ஆதிகேசவன் போலீஸ் வசம் சிக்கியதால் அதிர்ச்சி அடைந்த நான், கணபதி மீது மாவட்டமத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தேன். என்னை ஆதிகேசவன், பொறியாளர் முருகேசன், கணபதி, ஜெயவீரன்ஆகியோர் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக அதில் தெரிவித்திருந்தேன்.

போலீஸார் இந்தப் புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆதிகேசவன், ஜெயவீரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விட்டனர். ஆனால் முருகேசன் மற்றும் கணபதி மட்டும் கைது செய்யப்படவில்லை. அவர்களைத் தீவிரமாக தேடிவந்தனர்.

இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையில் கணபதி இன்னும்சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டு தான் உள்ளார். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ்நாடகமாடி வருகிறது.

நெல்லை ரஹமத் நகரில்தான் அவர் கணபதி வசிக்கிறார். அவர் வசிக்கும் இடம் போலீஸாருக்கும் நன்றாகத் தெரியும். அதுமட்டுமல்லாது நடிகர் விஜயகாந்த் தொடங்கியுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும்இப்போது கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தனது புகாரில் கூறியுள்ளார் விஜயன்.

இதற்கிடையே இந்தப் புகாரை நான் அனுப்பவில்லை என்று விஜயன் மறுத்துள்ளார். அதேசமயம், புகார் மனுவில்கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றும் கூறுகிறார்.

இந்த விஷயம் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கூறுகையில், மாவட்டச் செயலாளர்நியமனத்தில் விஜயகாந்த் தீவிர கவனம் காட்டுகிறார். அவர்களது கேரக்டர் குறித்து நன்கு விசாரித்த பிறகே மாவட்டச்செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

கணபதியின் படிப்பு மற்றும் மாவட்டத் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் திறமை ஆகியவற்றைக் கவனித்த பிறகேஅவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது என்றார்.

ஆனால் நெல்லை மாவட்ட தேமுதிக அதிருப்தியாளர்கள், விஜயகாந்த் அவசரப்பட்டு செயல்படுகிறார். தான் எடுக்கும் முடிவுகுறித்து கட்சியினரிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. உட்கட்சி ஜனாயகம் இல்லாத காரணத்தால்தான் இப்படிப்பட்ட நபர்கள்,மாவட்டச் செயலாளர்களாகி விடும் அவலம் நேர்ந்துள்ளது என்கிறார்கள்.

ஆதியின் கூட்டாளி கணபதி என்பது போலீஸ் பதிவேட்டிலும் தெளிவாக உள்ளது. அப்படி இருக்கையில் அவரை எப்படிவிஜயகாந்த் தேர்ந்தெடுத்தார் என்றும் அதிருப்தியாளர்கள் கேட்கிறார்கள். கணபதி விவகாரத்தால் கட்சியின் பெயர் கெட்டுவிட்டதாகவும் அவர்கள் புலம்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+