எதிர்க் கட்சிகள் கூண்டோடு சட்டசபை புறக்கணிப்பு
சென்னை :
மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
நடப்பு சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் மற்றும் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது. பகல் 12 மணிக்கு ஆளுநர்எஸ்.எஸ்.பர்னாலா கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.தமிழர் திருநாளான போகிப் பண்டிகையான இன்று சட்டமன்றம் கூட்டப்படுவதை எதிர்த்து திமுக, பாமக, காங்கிரஸ் ஆகியகட்சிகள் அவையின் முதல் நாள் கூட்டத்தைப் புறக்கணித்தன.
வெள்ள நிவாரணப் பணிகளை அரசு முறையாக செய்யாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்ஆகியவையும் ஆளுநர் உரையைப் புறக்கணித்தன.
இதனால் முக்கிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லாமல் அவை கூடியது. இதில் அதிமுக தவிர்த்து பாஜக மட்டுமேகலந்து கொண்டது. ஆளுநர் உரைக்குப் பின் முதல் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
நாளை பொங்கல் விடுமுறை. பின்னர் 16ம் தேதி மீண்டும் அவை கூடும். அப்போது இந்த ஆண்டுக்கான இடைக்காலபட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யும், அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடக்கும்.
கூட்டத் தொடர் ஒரு வாரமே நடக்கும் என்று தெரிகிறது. வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் வருவதால் இந்த அவையின்கடைசிக் கூட்டமாக இது இருக்கும்.
வெள்ள நிவாரணம், எதிர்க் கட்சியினர் மீது வழக்கு ஆகிய விவகாரங்களை எதிர்க் கட்சிகள் எழுப்பவுள்ளதால் கூட்டத் தொடர்மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications