இது ஆளுநர் உரையல்ல, ஜெ. பாராட்டு உரை
சென்னை:
சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில், சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை என்று தமிழக எதிர்க் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் இன்று ஆளுனர் பர்னாலாவின் உரையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியைதிமுக, பாமக, காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்தன.இந் நிலையில் ஆளுனர் உரை குறித்து திமுக சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில்,
சாலைப் பணியாளர்களுக்கு திரும்பவும் வேலை கொடுப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, அரசு ஊழியர்கள் இழந்தசலுகைகளை திரும்பக் கொடுப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்பு ஏதும் ஆளுனர்உரையில் இல்லை.
மொத்தத்தில், கடந்த ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா அரசைப் பாராட்டும் வகையில், தங்களைத் தாங்களே புகழ்ந்து எழுதி அதைகவர்னர் கையில் கொடுத்துப் படிக்கச் சொல்லியுள்ளார்கள் என்றார் துரைமுருகன்.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், அரசு ஊழியர்களுக்கு சந்தோஷம் தரும் வகையிலான, மற்ற தரப்பினரின்எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமான அறிவிப்பு எதுவும் இந்த அறிக்கையில் அறவே இல்லை.
ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில், செய்யத் தவறியவை, தகாத செயல்கள், அலங்கோலங்கள், அவலங்கள், மக்கள் விரோதசெயல்கள் இவை எல்லாவற்றையும் மூடி மறைக்க, நிறைவேற்றப்படாத திட்டங்களை, அறிவிப்புகளை ஆளுனர் உரையில்தெரிவித்துள்ளனர் என்றார்.
இதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும், ஆளுனர் உரையால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இழந்தசலுகைகளை மீண்டும் கொடுப்பது குறித்த அறிவிப்பையும், ஊதிய உயர்வையும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால்அதுகுறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகாதது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications