யானையிடம் சிக்கிய நீலகிரி கலெக்டர் குடும்பம்!
பவானி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் காரை காட்டு யானை ஒன்று துரத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆட்சித் தலைவர் விஜயக்குமார், தெங்குமரஹுடா என்ற இடத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து காண்டார். விழா முடிந்ததும்,தனது மனைவி, 8 மாதக் கைக்குழந்தையுடன் காரில் கிளம்பினார்.பவானி அருகே காட்டுப் பாதையில், நடு ரோட்டில் ஒரு காட்டு யானை அந்தக் காரை வழிமறித்தது. இதனால் கார்நிறுத்தப்பட்டது. காரின் என்ஜினை ஓட்டுனர் ஆப் செய்து விட்டார்.
காருக்குப் பின்னால் ஒரு யானைக் கூட்டம் மெல்ல சாலையை கடந்து கொண்டிருந்தது. இதனால் முன்னும் போகமுடியவில்லை,பின்னாலும் போக முடியவில்லை.
ஒரு வழியாக சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் வழிமறித்த யானை மெல்ல திரும்பி காட்டுக்குள் போனது. இதையடுத்துகார் மீண்டும் கிளம்பியது. இதைப் பார்த்த அந்த யானை மீண்டும் சாலைக்கு ஓடி வந்து காரைத் துரத்தத் தொடங்கியது.
காரை அங்கும் இங்கும் ஓட்டியபடி டிரைவர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனாலும் யானை தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்தது.
இந் நிலையில் அந்த சாலை வழியாக ஒரு பேருந்து வந்தது. காரை யானை துரத்துவதைப் பார்த்த பஸ் டிரைவர் ஹார்ன் அடித்தபடியானையை நோக்கி பஸ்ஸை ஓட்டினார்.
இதைக் கண்டு பயந்த யானை மீண்டும் காட்டுக்குள் ஓடி விட்டது. இதையடுத்தே கலெக்டரின் கார் தப்ப முடிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications