ஹஜ் நெரிசல்: பலி 362- இந்தியர்கள் 28 பேர்
மெக்கா:
மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 362 புனித யாத்ரீகர்கள் பலியாயினர். இதில் 28 பேர் இந்தியர்கள் ஆவர்.
மினாவில் உள்ள புனிதத் தலத்தில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்றனர்.அப்போது திடீரென அந்த இடத்தின் அருகே உள்ள பாலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.லட்சக்கணக்கான மக்கள் ஒருவர் மீது ஒருவர் தடுமாறு விழுந்ததில் 362 பேர் பலியாயினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 15பெண்கள் உள்பட 28 பேரும் அடக்கம். மேலும் 15 இந்தியர்களும் காயமடைந்துள்ளதாக மினாவில் உள்ள இந்திய கவுன்சல்ஜெனரல் யூசுப் சயீத் தெரிவித்துள்ளார்.
பலியான இந்தியர்களில் 12 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர்ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள், 2 பேர் ராஜஸ்தானையும், 2 பேர் மத்தியப் பிரதேசத்தையும்சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
பலியானவர்களில் மேலும் 2 பேர் செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஆவர்.
ஹஜ் கமிட்டி மூலமாகச் சென்று இச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடுவழங்கும் என ஹஜ் கமிட்டி தலைவர் தன்வீர் அகமத் தெரிவித்துள்ளார்.
சூரிய அஸ்தமானத்துக்குள் சாத்தான்கள் என்று கருதப்படும் தூண்கள் மீது கல் எறிந்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் மக்கள்வேகமாக முன்னேறியபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
கருணாநிதி இரங்கல்:
ஹஜ் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் இறந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஜ் யாத்திரையில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின்போது, ஏற்பட்டகூட்ட நெரிசலில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
நெஞ்சை நெகிழ வைத்தது அந்த செய்தி. தங்களது குடும்பத்தினரை, உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனதுஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications