மீனாட்சி கோவிலில் கத்தியுடன் நுழைந்த வாலிபர்!
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பெரிய பட்டாக்கத்தியுடன் புகுந்த வாலிபர் அர்ச்சகர்களையும், பக்தர்களையும்மிரட்டினாார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் நுழைவாயில்கள் மற்றும் கோவிலுக்குள் பல இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள்பொருத்தப்பட்டுள்ளன.கோவிலுக்கு வெளியேயும், உள்ளேயும் ஏராளமான போலீஸார் ரோந்து சுற்றியும் வருகின்றனர். இப்படிப் பலத்த பாதுகாப்பின் கீழ்இருக்கும் கோவிலில் பட்டாக் கத்தியுடன் ஒரு வாலிபர் நுழைந்து பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி விட்டார்.
கோவிலுக்கு வந்த ஒரு வாலிபர் நேராக சுவாமி சன்னதிக்கு சென்றார். திடீரென தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபெரிய பட்டாக் கத்தியை எடுத்த அவர் கோவிலில் அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்கள், பக்தர்களை நோக்கி கத்தியைசுழற்றிக் காட்டி பயமுறுத்தினார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த பட்டாக் கத்தி பறிமுதல்செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த நபர் தத்தனேரி பகுதியைச் சேர்ந்த பாலருகன் என்பதும், குடித்து விட்டு கோவிலுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. தத்தனேரி சுடுகாட்டில் அவர் வெட்டியானாக வேலை பார்த்து வருகிறார்.
மிக பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒரு நபர் நல்ல குடிபோதையில், பெரிய பட்டாக்கத்தியுடன் நுழையும் அளவுக்கு போலீஸார் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குடித்து விட்டு வருபவனை பார்த்தாலே தெரியுமே, அப்படி இருந்தும் இவனை எப்படி போலீஸார் உள்ளே நுழைய விட்டார்கள்என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவில் பாதுகாப்பை உருப்படியான போலீசாரை வைத்து பலப்படுத்த வேண்டும் என்றகோரிக்கையும் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications