தமிழக தலைமை தகவல் அதிகாரி நியமனம்
சென்னை:
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தமிழக தகவல் கமிஷனின் தலைமை தகவல் அதிகாரி மற்றும் இரண்டு மாநில தகவல்அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் உரிமைச் சட்டப்படி மாநில அரசின் தகவல்களை வெளியிடவும் அவை தொடர்பானமுறையீடுகளை ஆய்வு செய்யவும் மாநில தகவல் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.இந்த கமிஷனின் தலைமை தகவல் அதிகாரி மற்றும் இரண்டு மாநில தகவல் அதிகாரிகளை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா,எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், நிதியமைச்சர் பொன்னையன் ஆகியோர் கொண்ட குழு கடந்த மாதம் கூடியது. இக்குழுஎடுத்த முடிவின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் நாரயணன் நேற்று உத்தரவுபிறப்பித்தார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக தகவல் கமிஷனின் மாநில தலைமை தகவல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன்நியமிக்கப்படுகிறார். இவர் உணவுத்துறை செயலராக இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்றவர்.
இதேபோல, மாநில தகவல் கமிஷனர்களாக தமிழக அரசின் பொதுத்துறைச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஜி ராமகிருஷ்ணன்மற்றும் எரிசக்தித் துறை செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஆர்.ரத்தினசாமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications